இஃது, நகரவீறு மேற்கூறிய கணங்களோடு ஒருவழி முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) நகர இறுதியும் அதன் ஓர் அற்று - நகரவீற்றுப் பெயரும் மேற்கூறிய கணங்களொடு புணரும் வழி அஞ்ஞகாரவீற்றோடு ஓர் இயல்பிற்றாய் முடியும். எ - டு : பொருநுக்கடிது , சிறிது , தீது , பெரிது எனவும் ; ஞான்றது ; நீண்டது ; மாண்டது எனவும் ; பொருநுவலிது எனவும் ஒட்டுக . (3)
|