1. மெல்லொற்று ஈறுகள்

அதற்கு மேலும் ஒரு முடிபு

302.ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

இஃது, இன்னும் அம்மொழிக்கு எய்தியதோர் முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ்வெரிந் என்னும் சொல் அவ்வாறு ஈறு கெட்டு நின்றவிடத்து மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்குமுடிதலும் உரித்து.

எ - டு : வெரிக்குறை ; செய்கை , தலை புறம் என வரும் .

ஞகாரவீற்றொடு நகாரவீறு ஒத்தமுடிபிற்றாதலின் உடன் கூறப்பட்டது.

(6)