இஃது, ணகாரவீறு வேற்றுமைப் பொருட்கண் புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ணகார இறுதி வல்லெழுத்து இயையின் - ணகார வீற்றுப் பெயர் வல்லெழுத்து முதன்மொழி இயையின் . டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கு - டகாரமாய் முடியும் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண் . எ - டு : மட்குடம் ; சாடி, தூதை , பானை என வரும் . (7)
|