இஃது, திரிபு விலக்கிச் சாரியை வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று . (இ-ள்) ஆண் மரக் கிளவி அரை மர இயற்று - ஆண் என்னும் மரத்தை உணரநின்ற பெயர்ச்சொல் அரைமரம் அம்முப் பெறும் இயல்பிற்றாய்த் தானும் அம்முப்பெற்று முடியும் . எ - டு : ஆணங்கோடு ; செதின் , தோல் , பூ என வரும் . (9)
|