1. மெல்லொற்று ஈறுகள்

ணகர ஈற்றுத் தொழிற்பெயர்

307.தொழிற்பெயர் ரெல்லாந் தொழிற்பெய ரியல.

இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) தொழிற் பெயரெல்லாம் தொழிற்பெயர் இயல - ணகாரவீற்றுத் தொழிற்பெயரெல்லாம் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற்பெயரது இயல்பாய் வன்கணம் வந்தவழி வல்லெழுத்து உகரப்பேறும் மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வந்தவழி உகரமும் பெற்று முடியும்.

எ - டு : மண்ணுக்கடிது எனவும்: மண்ணுக்கடுமை எனவும் ; மண்ணுஞ்ஞான்றது ; ஞாற்சி எனவும்;மண்ணுவலிது , வலிமை எனவும் இருவழியும் ஒட்டுக.

`எல்லாம்' என்றதனான், தொழிற் பெயரெல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெறுவன கொள்க.1வெண்ணுக்கரை, எண்ணுப்பாறு, மண்ணுச்சோறு என வரும் .

(11)

1.வெண் - வெண்ணாறு (சோழநாட்டில் ஓர் ஆறு ) எண்ணுப்பாறு - எள்ளேற்றிய மரக்கலம் , எண் - எள் , பாறு - தோணி (பாவாணர்)