இஃது, அவ்வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபுபோலத் திரிந்து முடிவது கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வேற்றுமை அல்வழி - வேற்றுமையல்லாத விடத்து, எண் என் உணவுப்பெயர் - எண் என்று சொல்லப் படுகின்ற உணவினையுணரத்தும் பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து - வேற்றுமையது திரிந்துமுடியும் இயல்பு நிற்றலும் உரித்து. எ - டு : எட்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். உம்மையால், எண்கடிது என்று இயல்பாகவே பெரும் பான்மை.
|