இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயர் ஒன்றற்குத் தொழிற்பெயர் முடிபு விலக்கி இவ்வீற்று அல்வழி முடிபும் வேற்றுமை முடிபுங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்) முரண் என் தொழிற்பெயர் முதல் இயல்நிலையும் - முரண் என்று கூறப்படும் தொழிற்பெயர் இவ்வீற்றிற்கு இரு வழியும் முன்கூறிய இயல்பும் திரிபுமாகிய இயல்பின் கண்ணே நின்று முடியும். எ - டு : முரண்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; முரட்கடுமை;சேனை, தானை, பறை எனவும் வரும். இதனைத் "தொழிற்பெய ரெல்லாம்" (சூத்திரம்-11) என்பதன் பின் வையாத முறையன்றிய கூற்றினான், முரண்கடுமை என்னும் இயல்பும் அரண்கடுமை,அரட்கடுமை என்னும் உறழ்ச்சியும் கொள்க. (14)
|