இஃது, அவ்வீற்று முடிபு வேற்றுமையுடையன கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அகரம் ஆகாரம் வருங்காலை - அகர முதல் மொழியும் ஆகார முதல்மொழியும் வருமொழியாய் வருங்காலை, ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்து - நிலைமொழிக்கண் ஈற்றின் மேல் நின்ற அகரம் நீளாது நிற்பதேயன்றி நீண்டு முடிதலும் உரித்து. எ - டு : மரா அடி, குளாஅம்பல் எனவும்; மரவடி குளவாம்பல் எனவும் வரும். வருமொழி முற்கூறியவதனான், இவ்வீற்றுட் பிறவும் வேறுபாட்டின் முடிபுகொள்க. கோணாகோணம், கோணாவட்டம்1 என வரும். முன்னர்ச் "செல்வழியறிதல்" (சூத் - 17) என்பதனால் குளாஅம்பல் என்புழி வருமொழி ஆகாரக்குறுக்கமும், கோணாகோணம் என்புழி வருமொழி வல்லெழுத்துக்கேடும் கொள்க. (16)
1.கோணா கோணம் கோணா வட்டம் என்பனவற்றுள் கோணத்துள் கோணம் கோணத்துள் வட்டம் என ஏழனுருபு விரிக்க.
|