இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உள - மெல்லெழுத்தோடு உறழ்ந்து முடியும் மொழிகளும் உள; வழக்கத்தான செல்வழி அறிதல் - வழக்கின்கண் அவை வழங்கும் இடம் அறிக. எ - டு : குளங்கரை, குளக்கரை; சேறு, தாது, பூழி என வரும். `செல்வழியறிதல்' என்றதனால், குளங்கரை, குளக்கரை என்றது போல, அல்லன ஒத்த உறழ்ச்சியல்லவென்பது கொள்க. 'வழக்கத்தான என்றதனான்', இவ்வீற்று வேற்றுமைக்கண் முடியாதனவெல்லாம் முடித்துக்கொள்க. இலவங்கோடு எனவும், புலம்புக்கனனே எனவும், நிலத்துக்கடந்தான் எனவும் வரும். (17)
|