1. மெல்லொற்று ஈறுகள்

`இல்லம்' என்னும் மரப்பெயர்

314.இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே.

இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று.

(இ-ள்) இல்ல மரப்பெயர் விசை மர இயற்று- இல்லம் என்னும் மரத்தினை உணரநின்ற பெயர் விசையென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும்.

எ - டு : இல்லங்கோடு; செதிள், தோல், பூ என வரும்.

இதன்கண் மகரக்கேடு முன்னர் "எல்லாம்" (சூத்திரம்-69)என்பதனாற் கொள்க.

(18)