1. மெல்லொற்று ஈறுகள்

அடையடுத்த ஆயிரம்

319.அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே,

இஃது, அவ் வெண்ணுப்பெயர் அடையடுத்த வழி முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) அடையொடு தோன்றினும் அதன் ஓர் அற்று - அவ்வாயிரம் என்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியோடு தோன்றினும் மேற்சொன்னதனோடு ஒரு தன்மைத்தாய் அத்துப் பெற்று முடியும்.

எ - டு : பதினாயித்தொன்று; இரண்டு என ஒட்டுக.

மேல் இலேசினான் வந்தனவும் அடையடுத்து ஒட்டுக. பதினாயிரத்துக் குறை, கூறு, முதல் என வரும்.

(23)