இஃது, மேற்கூறிய எல்லாம் என்பதற்கு அல்வழிக்கண் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - அவ்வெல்லாமென்பது அல்வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை. மேற்கூறிய செய்கைமேலே இது கூறினமையின், மகரக்கேடும் இறுதி உம்முப்பேறுங் கொள்க. எ - டு : எல்லாங்குறியவும்; சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்; எல்லாங்குறியரும்; சிறியரும், தீயரும், பெரியரும் எனவும் ஒட்டுக. இனி, உரையிற்கோடல் என்பதனால், இறுதி உம்மின்றி எல்லாங் குறிய, எல்லாருங்குறியர் எனவும் வரும். மேல் இலேசினாற் கூறிநின்ற வல்லெழுத்தினோடு மெல்லெழுத்து வகுத்தமையின், இஃது அல்வழியாயிற்று. (28)
|