இஃது , மேலதற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) அல்லதன் மருங்கின் சொல்லும் காலை - அந் நும் என ஒரு பெயர் தன்னை அல்வழியிடத்துச் சொல்லுங்காலை , உ கெட நின்ற மெய்வயின் ஈ வர இ இடைநிலை ஈறு கெட ரகரம் புள்ளியொடு புணர்ந்து நிற்றல் வேண்டும் - நகரத்து உகரங் கெட அந்நின்ற மெய்யிடத்து ஈகாரம் வர , ஓர் இகரம் இடையிலே பெற மகரம் கெட அவ்விடத்து ஒரு ரகரம் புள்ளியோடு பொருந்தி நிற்றல்வேண்டும் . அப்பால் மொழிவயின் இயற்கை யாகும் - வரு மொழியிடத்து அம் மொழி தான் இவ்வாறு திரியாது இயல்பாதல் வேண்டும் . எ - டு : நீயிர்குறியீர் ; சிறியீர் , தீயீர், பெரியீர் என வரும் . ஞான்றீர், நீண்டீர், மாண்டீர் என இயல்புகணத்தோடும் ஒட்டுக. (31)
1. நும் என்னும் வேற்றுமைத் திரிபுப்பெயர் எழுவாய் வேற்றுமையின் நீயீர் என்றாகும் என இந்நூற்பாவிற் கூறியிருப்பது தமிழியல்புக்கும் உத்திக்கும் பொருந்தாது . நும் வேறு நீயிர் வேறு . நீன் என்னும் முன்னிலையொருமைப் பெயர் ஈறுகெட்டு நீ என வழங்குவதே இர் ஈறு பெற்று நீயிர் என்னும் பன்மைப் பெயராகும் . (பாவாணர்)
|