1. மெல்லொற்று ஈறுகள்

மகரம் குறுகுமிடம்

331.வகார மிசையும் மகாரங் குறுகும்.

இது, பருந்துவிழுக்காடாய் " அரையளபு குறுகல் " (நூன் மரபு - சூத்திரம், 13 ) என்பதற்கு ஓர் புறனடை கூறுகின்றது.

(இ-ள்) வகாரம் மிசையும் மகாரம் குறுகும் - மேல் ஒரு மொழிக்கண் கூறிய "னகாரை முன்னர்" (மொழிமரபு - சூத்திரம் 19) அன்றி ஈண்டு புணர்மொழிக்கண் வகரத்தின் மேலும் மகரங்குறுகும்.

எ - டு : நிலம் வலிது என வரும்.

(35)