இஃது , இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று . (இ-ள்) குயின் என் கிளவி இயற்கையாகும் - குயின் என்னும் சொல் திரியாது இயல்பாய் முடியும் . எ - டு : குயின்குழாம் ; செலவு , தோற்றம் , பறைவு என வரும் . குயின் என்பது மேகம் . (40)
|