`எகின்' என்னும் மரப்பெயர்
இது, திரிபு விலக்கி அம்மு வகுத்தல் நுதலிற்று .
(இ-ள்) எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்று - எகின் என்னும் சொல்லும் மரப்பெயராயின் ஆண்மரத்தினது இயல்பிற்றாய் அம்முப் பெற்று முடியும் .
எ - டு : எகினங்கோடு ; செதிள் , தோல் , பூ என வரும் .