1. மெல்லொற்று ஈறுகள்

`எகின்' என்னும் பிற உயிரி1யின் பெயர்

338.ஏனை யெகினே அகரம் வருமே
வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும்.

இதுவும் அது .

(இ-ள்) ஏனை எகின் அகரம் வரும் - ஒழிந்த மரமல்லா எகின் நிலைமொழிக்கண் அகரம் வந்து முடியும் ; வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும் - அவ்விடத்து வருமொழி வல்லெழுத்து இயல்பு மிக்கு முடிதல் வேண்டும் .

எ - டு : எகினக்கால் ; செவி , தலை , புறம் என வரும் .

மேலைச்சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனான் , இயல்பு  கணத்துக்கண்ணும் அகரப்பேறு கொள்க . எகினஞாற்சி ; யாப்பு , அடைவு என வரும் .

`இயற்கை' என்றதனான் , அகரப்பேற்றோடு மெல்லெழுத்துப் பேறும் கொள்க. எகினங்கால் ; செவி , தலை , புறம் என வரும்.

(42)

1.உயிரி -பிராணி.