`மீன்' என்னும் சொல்
இதுவும் , அவற்றுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வு- மீன் என்னும் சொல் தன் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும் .
எ - டு : மீன்கண் , மீற்கண்; சினை, தலை , புறம் என வரும்.