1. மெல்லொற்று ஈறுகள்

அதற்கு மேலும் முடிபுகள்

342.மெல்லெழுத்து மிகினும் மான மில்லை.

இது , மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று .

(இ-ள்) மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - மேற் கூறிய தேன் என் கிளவி வல்லெழுத்து வந்தால் வல்லெழுத்து மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிக்குமுடியினும் குற்றம் இல்லை .

னகரக் கேடு அதிகாரத்தாற் கொள்க.

எ - டு :தேங்குடம் ; காடி , தூதை , பானை என வரும்.

(46)