1. மெல்லொற்று ஈறுகள்

`தேன்' முன் `இறால்'

344.இறாஅல் தோற்றம் இயற்கை யாகும்.

இஃது, இன்னும் அதற்கு உயிர்க்கணத்து ஒரு மொழிக்கண் முடியும் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) இறாஅல் தோற்றம் - தேன் என்னும் சொல் இறால் என்னும் வரு மொழியது தோற்றத்துக்கண் இயற்கை ஆகும் - நிலைமொழி னகாரங் கெடாதே நின்று இயல்பாய் முடியும் .

எ - டு :தேனிறால் என வரும்.

(48)