இஃது , அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்து - அத்தேன் என்பது இறால் என்னும் வருமொழிக்கண் பிறிதும் ஓர் தகரவொற்று உடன்மிகு தகரத்தோடு நின்று முடிதலும் உரித்து . மேல் "வல்லெழுத்து மிகுவழி யிறுதியில்லை" (சூத் - 45) என்றதனான் , நிலைமொழி யீறு கெடுக்க `தகரமிகும்' என்னாது ஒற்றுமிகு தகரம் என்றதனால் ஈரொற்றாக்குக. எ - டு : தேத்திறால் என வரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனால் பிற வருமொழிக்கண்ணும் இம் முடிபு கொள்க . தேத்தடை , தேத்தீ என வரும் . `தோற்றம்' என்றதனால் , தேனடை , தேனீ என்னும் இயல்பும் கொள்க. (49)
|