இஃது , எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று . (இ-ள்) சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும் - அவ்வியற்பெயர் பண்படுத்து வருவழி முன்கூறிய இருமொழிச் செய்கையும் தவிர்ந்து இயல்பாய் முடியும். எ - டு : பெருஞ்சாத்தன்றந்தை , பெருங்கொற்றன்றந்தை என வரும். (54)
|