இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகும்- அழன் என்னும் சொல் அழன் என்னும் கைரவீறு கெட வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். எ - டு : அழக்குடம்; சாடி, தூதை, பானை, என வரும். அழனென்பது பிணம். (59)
|