2. இடையொற்று ஈறுகள்

`தாய்' என்னும் சொல்

359.தாயென் கிளவி யியற்கை யாகும்.

இஃது, இவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) தாய் என் கிளவி இயற்கையாகும் - தாய் என்னும் சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும்.

எ - டு : தாய்கை;செவி, தலை , புறம் என வரும்.

இவ்வியல்பு மேல் இன்னவழி மிகும் என்கின்றமையின், அஃறிணை விரவுப்பெயர் என்பதனுள் அடங்காதாயிற்று.

(63)