2. இடையொற்று ஈறுகள்

யகர ஈற்றிற்கு வேறு முடிபு

361.மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே.

இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இ-ள்) மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உள-மேற்கூறிய வல்லெழுத்தினொடு மெல்லெழுத்து மிக்கும் உறழ்ந்தும் முடியும் மொழிகளும் உள.

எ - டு : வேய்ங்குறை, வேய்க்குறை; சிறை, தலை , புறம் என வரும்.

(65)