இது, மேலனவற்றுட் சார் என்பதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) சார் என்கிளவி காழ்வயின் வலிக்கும் - சார் என்னும் சொல் காழ் என்னும் சொல்லொடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும். எ - டு : சார்க்காழ்1 என வரும். (69)
1.சாரினது வித்தென்பதே பொருள். இதனை வயிரமெனிற் கிளந்தோதுவரென்று உணர்க.
|