`பீர்' என்னுஞ் சொற்கு, மேலும் ஒரு முடிபு
இஃது, அவற்றுட் பீர் என்பதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று.
(இ-ள்) பீர் என் கிளவி அம்மொடும் சிவணும் - பீர் என்னும் சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முச்சாரியையும் பெற்று வந்து முடியும்.
எ - டு : பீரங்கோடு; செதிள், தோல் , பூ என வரும்.