இஃது, லகார ஈற்றிற்கு னகாரஈற்று வேற்றுமையோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) லகார இறுதி னகார இயற்று - லகார வீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து முதன் மொழி வரின் னகாரவீற்றின் இயல்பிற்றாய் லகாரம் றகாரமாய்த் திரிந்து முடியும். எ - டு : கற்குறை; சிறை, தலை , புறம் என வரும். (71)
|