1. மெல்லொற்று ஈறுகள்

அதற்கு மேலும் ஒரு முடிபு

368.மெல்லெழுத் தியையின் னகார மாகும்.

இஃது, அவ்வீற்று மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும் -அவ்வீறு மென்கணம் வந்து இயையின் லகாரம் னகாரமாய்த் திரிந்து முடியும்.

எ - டு : கன்ஞெரி, நுனி , முறி என வரும்.

இச் சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கண் சிங்கநோக்காக வைத்தமையான் , அல்வழிக்கும் இம் முடிபு கொள்க.

கன்ஞெரிந்தது; நீண்டது, மாண்டது என வரும்.

(72)