1. மெல்லொற்று ஈறுகள்

லகார ஈற்றிற்கு வேறு முடிபு

371.நெடியதன் இறுதி இயல்புமா ருளவே.

இஃது, மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) நெடிய தன் இறுதி இயல்புமார் உள - நெடியதன் இறுதிக்கண் நின்ற லகாரவீறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம்போலத் திரிந்து உறழ்தலேயன்றி இயல்பாய் முடிவனவும் உள.

எ - டு : பால்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும்.

இயல்பாகாது திரிந்தன வேல்கடிது, வேற்கடிது என்றாற் போல்வன.

(75)