1. மெல்லொற்று ஈறுகள்

`வல்' என்னும் சொல்

374.வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே.

இதுவும், இவ்வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்று- வல் என்னும் சொல் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக் கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணத்தும் இடைக்கணத்தும் வகரத்தும் உகரம் பெற்றும் முடியும்.

எ - டு : வல்லுக்கடிது; சிறிது , தீது, பெரிது ,ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும் ;வல்லக்கடுமை ; சிறுமை ,தீமை , பெருமை ,ஞாறுசி , நீட்சி , மாட்சி , வலிமை எனவும் வரும்.

(78)