2. இடையொற்று ஈறுகள்

`வெயில்' என்னும் சொல்

378.வெயிலென் கிளவி மழையியல் நிலையும்.

இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) வெயில் என் கிளவி மழை இயல் நிலையும்-வெயில் என்னும் கிளவி மழை என்னும் சொல்லியல்பின் கண்ணே நிலைபெற்று அத்தும் இன்னும் பெற்று முடியும்.

எ - டு : வெயிலத்துக் கொண்டான்; வெயிலிற் கொண்டான்; சென்றான்; தந்தான், போயினான் என வரும்.

(82)