இஃது, ஒரு மொழி ஆய்தம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஆய்தப் புள்ளி- ஆய்தமாகிய புள்ளி, குறியதன் முன்னர்- குற்றெழுத்தின் முன்னர், உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து- உயிரொடு புணர்ந்த வல்லெழுத்து ஆறன் மேலது. (5) எ - டு: எஃகு, கஃசு என வரும். குறியதன் முன்னரும் வல்லெழுத்து மிசையும் இடம், இஃது உயிரன்மையின், இதற்குப் பற்றுக்கோடு என்பதில்லை. கஃறீது என்பதனை மெய்பிறிதாகிய புணர்ச்சி (புணரியல்-7) என்ப வாகலின், `புள்ளி' என்றதனான் ஆய்தத்தை மெய்ப்பார் படுத்துக்கொள்க. ஈண்டுப் பெரும்பான்மையும் உயிரென்றது, மேல் `ஆய்தத் தொடர் மொழி' (குற்றியலுகரப் புணரியல் -1) என்றோதலின் குற்றியலுகரத்தினை வெஃகாமை முதலிய பிற உயிர்வரவு சிறுபான்மையெனக் கொள்க.
|