இஃது, மேலனவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும்- அச்சுட்டு முதலாகிய வகரவீறு வன்கணம் வந்தால் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியல்லாத அல்வழிக்கண் அவ்வகரம் ஆய்தமாய்த் திரிந்து முடியும். எ - டு : அஃகடிய, இஃகடிய, உஃகடிய; சிறிய , தீய , பெரிய என வரும். (84)
|