2. இடையொற்று ஈறுகள்

அதற்கு வேறு முடிபுகள்

381.மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும்.

இஃது, மேலனவற்றிற்கு மென்கணத்து முடிபு கூறுதல் நுதலிற்று.

(இ-ள்) மெல்லெழுத்து இயையின் அ எழுத்து ஆகும்-அச்சுட்டு முதலாகிய வகரவீறு மென்கணம் வந்து இயைந்த விடத்து அவ்வகரம் அம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும்.

எ - டு : அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண்; நூல்,மணி என வரும்.

(85)