2. இடையொற்று ஈறுகள்

அதற்கு வேறு முடிபுகள்

382.ஏனவை புணரின் இயல்பென மொழிப.

இஃது, மேலனவற்றிற்கு இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் முடிபு கூறுகின்றது.

(இ-ள்) ஏனவை புணரின் இயல்பு என மொழிப.-அச்சுட்டு முதலாகிய வகரவீறு ஒழிந்த இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரின் அவ்வகரம் திரியாது இயல்பாய் முடியும்.

எ - டு : அவ்யாழ் , இவ்யாழ் , உவ்யாழ் ,வட்டு, அடை , ஆடை என ஒட்டுக.

(86)