2. இடையொற்று ஈறுகள்

வகர ஈற்று உரிச்சொல்

383.ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே.

இஃது, இவ்வீற்றுள் ஒழிந்த ஒன்றற்கும் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் முடிபு கூறுகின்றது.

(இ-ள்) ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்று- ஒழிந்த வகரவீறு ஞகரவீற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன் கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் அல்லனவற்றுக்கண் உகரமே பெற்றும் முடியும்.

எ - டு : தெவ்வுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது, எனவும்; தெவ்வுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும்.

(87)