2. இடையொற்று ஈறுகள்

`தமிழ்' என்னும் சொல்

386.தமிழென் கிளவியும் அதனோ ரற்றே.

இதுவுமது

(இ-ள்) தமிழ் என் கிளவியும் அதன் ஓர் அற்று- தமிழ் என்னும் சொல்லும் அதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்கும் பெற்று முடியும்.

தமிழ்க்கூத்து; சேரி,தோட்டம், பள்ளி என வரும்.

(90)