இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்பு- பாழ் என்னும் சொல் வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும். எ - டு : பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு; சேரி, தோட்டம், பாடி என வரும். (92)
|