மொழி மரபு

1. சார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு

ஆய்தம் புணர் மொழியுள்ளும் வருமாறு

39.ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும்.

இஃது, அவ்வாய்தம் புணர் மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று.

ஈறு இயல் மருங்கினும்- நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தினும், இசைமை தோன்றும்- ஆய்த ஒலி தோன்றும்.

எ - டு: கஃறீது, முஃடீது என வரும். ஈண்டும் இடங்கள் அவை.

(6)