இஃது, மேலதற்கு ஒருவழி எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்) பத்து என் கிளவி இடை ஒற்று கெடு வழி ஆய்தப்புள்ளி நிற்றல் வேண்டும் - (அவ்) ஏழ் என்பதனோடு பத்து என்பது புணரும் இடத்து அப்பத்து என்(னும்) கிளவி(யின்) இடை ஒற்றுக் கெடுவழி ஆய்தமாகிய புள்ளி நிற்றல் வேண்டும். எ - டு : எழுபஃது என வரும். (95)
|