ஏழ் முன் அளவு முதலிய பெயர்கள்
இஃது, மேலதற்கு எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று.
(இ-ள்) ஆயிரம் வருவழி உகரம் கெடும் - (அவ் ஏழ் என்பது ) ஆயிரம் என்பது வருமிடத்து (முன்பெற்ற) உகரம் பெறாது முடியும் .
எ - டு : ஏழாயிரம் என வரும்.