இதுவும் , மேலதற்கு எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது . (இ-ள்) உயிர் முன் வரினும் - (அவ் ஏழ் என்பது அளவு முதலிய பெயர்களுள்) உயிர் முதல்மொழி (முன் ) வரினும் , ஆ இயல் திரியாது - (நெடுமுதல் குறுகி உகரம் வராது முடியும்) அவ் வியல்பில் திரியாது முடியும். எ - டு : ஏழ்கல், ஏழுழக்கு , ஏழொன்று , ஏழிரண்டு என வரும். (99)
|