இதுவும் அது. ஆ- ஈ - ஊ - ஏ - ஐ - ஓ - ஒள என்னும் அப்பால் ஏழும் - ஆ - ஈ - ஊ - ஏ - ஐ - ஓ - ஒள என்று சொல்லப்படுகின்ற அக் கூற்று ஏழும், ஈர் அளபு இசைக்கும் - (ஒரோவொன்று) இரண்டு மாத்திரையாக ஒலிக்கும், நெட்டெழுத்து என்ப - (அவைதாம்) நெட்டெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் (புலவர்). ஐகார ஒளகாரங்களுக்கு இனம் இல்லையெனினும், மாத்திரையொப்புமையான் அவை நெட்டெழுத்து எனப்பட்டன. (4)
|