2. இடையொற்று ஈறுகள்

அதற்கு வேறு முடிபு

400.ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வரூஉங் காலை யான.

இஃது, மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) ஆய்தம் நிலையலும் வரைநிலை இன்று - (ளகாரம் டகாரமாயே திரியாது) ஆய்தமாய்த் திரிந்து நிற்றலும் வரையும் நிலைமை இன்று, தகரம் வரும் காலை - தகர முதல்மொழி வரும் காலத்து.

எ - டு : முஃடீது, முட்டீது என வரும்.

(104)