இஃது, மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) நெடியதன் இறுதி இயல்பாகுநவும் - (ளகாரம்) நெடியதன் இறுதி திரியாது இயல்பாய் முடிவனவற்றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும் - வேற்றுமை அல்லாத அல்வழியிடத்து (வேற்றுமையின் இயல்புடையனவாய்த் திரிந்து) முடிதலையும் , போற்றல் வேண்டும் மொழியுமார் உள - போற்றுதல் வேண்டும் மொழிகளும் உள. எ - டு : வாள்கடிது , கோள்கடிது : சிறிது, தீது , பெரிது எனவும்,தோட்கடிது, நாட்கடிது;சிறிது,தீது,பெரிது எனவும் வரும். `போற்றல் வேண்டும்' என்றதனான் , உதளங்காய்; செதிள் , தோல், பூ என அம்முப்பெற்று முடிவன கொள்க. (105)
|