இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்) இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும்-இருள் என்னும் சொல் (வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்) வெயில் என்னும் சொல்லின் இயல்பிலே (நின்று அத்தும் இன்னும் பெற்று) முடியும். எ - டு : இருளத்துக் கொண்டான், இருளிற் கொண்டான், சென்றான், தந்தான் , போயினான் என வரும். (107)
|