1. குற்றியலுகரத்தின் இயல்பு

அவற்றுள், ஈரொற்றுத் தொடர்கள்

408.அவற்றுள்,
ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா.

இஃது, அவ் ஆறனுள் ஓர் ஈற்றிற்கு எய்தியது விலக்கிப்பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ-ள்) அவற்றுள் ஈர் ஒற்று தொடர்மொழி - அவற்றுள் ஈர் ஒற்றுத்தொடர் மொழி (களில்), இடைத்தொடர் ஆகா - இடைத்தொடர் ஆகா, (வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் ஆம்.)

எ - டு : ஈர்க்கு ; மொய்ம்பு என வரும்.

(2)