இஃது, எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. (இ-ள்) அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லும் இடத்தும், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும், எல்லா இறுதி உகரமும் நிறையும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும். எ - டு : நாகு கடிது, நாகு கடுமை , வரகு கடிது , வரகு கடுமை என வரும். (3)
|