1. குற்றியலுகரத்தின் இயல்பு

அதற்கு, மேலும் ஒரு முடிபு

410.வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை இயற்கை நிலையலு முரித்தே.

இஃது, எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது.

(இ-ள்) வல்லொற்றுத் தொடர்மொழி - (அவ் ஈற்றுள்ளும்) வல்லொற்றுத் தொடர்மொழி, வல்லெழுத்து வருவழி, வல்லெழுத்து (முதல்மொழி வருமொழியாய்) வரும் இடத்து-தொல்லை இயற்கை நிலையலும் உரித்து - முன் (கூறிய) இயற்கை நிற்றலும் உரித்து.

எ - டு : கொக்குக் கடிது , கொக்குக் கடுமை என வரும்.

(4)